Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஐபிஎல் 200 வது போட்டியில் சென்னை படுதோல்வி

0

.எஸ்.கே அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளது.
ஐ.பி.எல் 2020 தொடரின் 41-வது லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. மும்பை அணியின் கேப்டன் ரோஹித் காயம் காரணமாக இன்றையப் போட்டியில் அவர் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக பொல்லார்டு கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் பொல்லார்டு பந்துவீச்சை தேர்வு செய்தார்.
சென்னை அணி தொடர் தோல்வி காரணமாக சீனியர் வீரர்களான வாட்சன், கேதர் ஜாதவ், சாவ்லா அணியிலிருந்து நீக்கப்பட்டு இளம்வீரர்களான ருத்துராஜ், ஜெகதீசன் மற்றும் வெளிநாட்டு சீனயர் வீரரான இம்ரான் தாஹீருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
சி.எஸ்.கே அணியில் முதன்முறையாக ருத்துராஜ் தொடக்க வீரராக களமிறங்கினார். சிறப்பாக விளையாடி வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல் ஒவரிலேயே ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டானார்.
முதல் ஓவரிலேயே விக்கெட் விழுந்த அதிர்ச்சியிலிருந்து மீளாத ரசிகர்களுக்கு சி.எஸ்.கே வீரர்கள் அடுத்தடுத்து அதிர்ச்சியளித்தனர். ராயுடு 2 ரன்களிலும், டூ-பிளசிஸ் 1 ரன்னிலும், ஜெகதீசன் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகினர். சி.எஸ்.கே அணி 3 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து மிகவும் பரிதாப நிலைக்கு சென்றது.
கேப்டன் மகேந்திர சிங் தோனி மற்றும் ரவீந்திர ஜடேஜா சற்று ஆறுதல் அளிப்பார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் ஜடேஜா 7 ரன்னில் நடையை கட்டினார். ராகுல் சஹர் பந்துவீச்சில் மெகா சிக்சர் ஒன்றை தோனி அடித்தார். நீண்ட நாட்களுக்கு பின் தோனி இன்று வானவேடிக்கை நிகழ்த்துவார் என்று ஆவலுடன் இருந்த நிலையில் அடுத்த பந்திலேயே அவுட்டாகி தோனி ரசிகர்களின் கனவை தவுடுபிடி ஆக்கினார்.மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சில் சிக்கிய சி.எஸ்.கே அணி சின்னாபின்னமானது.இறுதியாக சி.எஸ்.கே அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்துள்ளது. சி.எஸ்.கே அணி சார்பில் சாம் குர்ரான் மட்டும் சிறப்பாக விளையாடி 52 ரன்கள் குவித்தார். மும்பை அணியில் வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதையடுத்து 115 ரன்கள் எடுத்தால் வெற்றி எளிய என்ற இலக்குடன் மும்பை அணியின் தொடக்க வீரர்களாக டீ-காக், இஷான் கிஷான் இறங்கினார்கள். எளிய இலக்கை அசால்ட்டாக துரத்திய மும்பை அணி தொடக்க வீரர்கள் 12.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி எட்டியது. ஐ.பி.எல் வரலாற்றில் சி.எஸ்.கே அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியடைவது இதுவே முதன்முறையாகும். மேலும் சி.எஸ்.கே அணிக்கு இது 200-வது போட்டி என்பது குறிப்படதக்கது.

*CSKvsMI | 200-வது போட்டியில் வரலாறு காணாத தோல்வியடைந்த சி.எஸ்.கே*

Leave A Reply

Your email address will not be published.