பத்திரிக்கையாளர்களுக்கு 50 சதவீத கட்டண சலுகையுடன் புதிய AVI App அறிமுகம்.
பத்திரிக்கையாளர்களுக்கு 50 சதவீத கட்டண சலுகையுடன் புதிய AVI App அறிமுகம்.
திருச்சியில் DVI கேப்ஸின் புதிய செயலி அறிமுகம் விழா திருச்சியில் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து DVI கேப்ஸ் இயக்குனர் ஸ்ரீனிவாஸ் அவர்கள் பத்திரிக்கையாளர்களிடம் கூறும்போது நாங்கள் கடந்த 12 ஆண்டுகளாக டிராவல்ஸ் மற்றும் டூரிசம் சேவை செய்து வருகிறோம். எனக்கு டூரிஸம் துறையில் கடந்த 20 வருட அனுபவங்கள் உண்டு.
தற்போது கோவிட் 19 காலத்தில் ஏற்பட்ட புதிய வாய்ப்பின் மூலம் எங்கள் நிறுவனம் DVI App எனும் புதிய இந்திய செயலி மூலம் உள்ளூர் மக்களுக்கு சேவை செய்ய முனைந்துள்ளாம். இந்த ஆப் மூலம் அனைத்து விதமான கார்களும் புக் பண்ணி கொள்ளலாம்.
எங்கள் நிறுவனத்திற்கு சொந்தமான டூரிஸ்ட் வண்டிகள் மூலமாகவும் பயிற்சி அளிக்கப்பட்ட ஓட்டுனர்கள் மூலமாகவும் முதல் தரமான சேவையை குறைந்த கட்டணத்தில் தர உள்ளோம்.
தற்போது பெண் வாடிக்கையாளர்களுக்கு பெண் ஓட்டுநர்கள் பரிந்துரைக்கப்படும்.
இந்த ஆப் மூலம் சுற்றுலாத்துறையை சார்ந்துள்ள ஓட்டுனர்களுக்கு புதிய வாய்ப்பு கிடைக்க உள்ளது.
ஆப்பை முதல்முறையாக டவுன்லோட் செய்பவர்களுக்கு 1000 ரூபாய் கட்டண சலுகை உண்டு.
தற்போது திருச்சியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள எங்களது டிராவல்ஸ் நிறுவனம் அடுத்த மூன்று மாதங்களில் தமிழகம் முழுவதும் ஆரம்பிக்கப்பட உள்ளது.
அவசர வேலையாக செல்லும் பத்திரிகை, ஊடக நண்பர்களுக்கு ( அடையாள அட்டை உள்ளவர்களுக்கு) கட்டணத்தில் 50 சதவீத தள்ளுபடி உண்டு எனவும் கூறினார்.
புதிய செயலி அறிமுகம் படுத்தும் நிகழ்ச்சியில் இயக்குனர் ஸ்ரீநிவாஸ் உடன் ஆடிட்டர் நடராஜன், முபாசர், செய்தி தொடர்பாளர் பார்த்தசாரதி மற்றும் டிராவல்ஸ் ஓட்டுனர்கள் பலரும் கலந்து கொண்டனர்.