பெரியாரின் 142 வது பிறந்தநாளை முன்னிட்டு மகேஷ் பொய்யமொழி எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பெரியாரின் 142 வது பிறந்தநாளை முன்னிட்டு மகேஷ் பொய்யமொழி எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தந்தை பெரியாரின் 142 வது பிறந்த நாளை முன்னிட்டு திமுக திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில், காட்டூரில் அமைந்துள்ள பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் சிலைக்கும் மற்றும் திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில், வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவ படத்திற்கும் 142வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எம்.எல்.ஏ தலைமையில் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் பகுதி செயலாளர்கள் கொட்டப்பட்டு தர்மராஜ், மலைக்கோட்டை மதிவாணன், கோவிந்தராஜன், வண்ணை அரங்கநாதன் மற்றும் ஒன்றிய, பகுதி, நகர, பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் அணிகளின் அமைப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.